தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுத்த தாய்

#Hospital
Prathees
4 years ago
தனது கல்லீரலின் ஒரு பகுதியை மகனுக்கு கொடுத்த தாய்

உயிருடன் வாழும் தாயின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து 15 வயது மகனுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது பேராதனை வைத்தியசாலையில் நடைபெற்ற முதல் சம்பவம் எனவும் அது  மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

 இந்த அறுவைச் சிகிச்சை  செப்டம்பர் 25 ம் திகதி அன்று செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறுவைச் சிகிச்சைக்கு  கிட்டத்தட்ட 13 மணி நேரம் ஆனது என்று மருத்துவமனையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

பேராதனை மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர்கள், கண்டி, கொழும்பு, ராகம மருத்துவனைகளின் விசேட வைத்தியர்கள் உட்பட்ட குழுவினர் இந்த அறுவைச்சிகச்சையை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அறுவைச் சிகிச்சையானது  எலஹெர பக்கமுண  பிரதேசத்தைச் சேர்ந்த  15 வயது மகன் மற்றும ; 37 வயதுடைய தாய் ஒருவருக்:கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4