அரசியலில் சேரும் எண்ணம் இல்லை: ரோஹித

#Mahinda Rajapaksa #Rohitha Rajapaksa
Prathees
2 years ago
அரசியலில் சேரும் எண்ணம் இல்லை: ரோஹித

தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது தந்தை மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மட்டுமே பொது பிரச்சாரங்களில் ஈடுபடடதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வாக்காளர் என்பதால் தான் குருநாகல் மக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஆனால் எதிர்காலத்தில் போட்டியிடும் நோக்கத்துடன் அவர் அதை செய்யவில்லை என்றும் ரோஹித கூறினார். 

குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது நான் அவருடன் இருந்தேன்இ இப்போது அவர் பிரதமராக இருந்ததால் அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தில். யாராவது வேலை செய்ய வேண்டும் என்பதால் நான் அதை ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்கிறேன் என்று ரோஹித மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!