இலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தர் விளக்கமறியலில்

#Arrest
Prasu
4 years ago
இலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தர் விளக்கமறியலில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொமும்பில் இருந்த வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிரதேச சபைக்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் நபரொருபரிடம் குறித்த உத்தியோகத்தர் இலஞ்சத்தினை பெற்ற போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதி மன்ற நீதிபதியின் வாசஸ்தலத்திற்கு கொண்டு சென்று முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன், இலஞ்சி ஓழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக 18 ஆம் திகதி மேலதிக விசாரனைகளுக்காக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அனுமதியளித்தார்.

பொதுமகனுக்கான ஆவணம் ஒன்றினை வழங்குவதற்காக 250,000 இலட்சம் கோரிய உத்தியோகத்தர் ஏற்கனவே 25,000 பணம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இன்றைய தினம் இரண்டாவது தடவையாக 25,000 பணத்தை இலஞ்சமாக பெற்றபோதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4