முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானிகளால் சினிமா ‘ஷூட்டிங்’

Keerthi
4 years ago
முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானிகளால் சினிமா ‘ஷூட்டிங்’

சர்வதேச திரைத்துறையில் முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் சினிமா ‘ஷூட்டிங்’ எடுக்கவுள்ளனர். இதற்காக இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நடிகையுடன் செல்கின்றனர்.

மூத்த ரஷ்ய விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ், நடிகை யூலியா பெரெசில்ட், திரைப்பட தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ ஆகியோர் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செல்கின்றனர். இவர்களில் பெரெசில்ட் மற்றும் ஷிபென்கோ ஆகியோர் ‘சவால்’ என்ற திரைப்படத்திற்கான ஷூட்டிங்கை, இங்கு நடத்தவுள்ளனர். இதனை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் சர்வதேச அளவில் முதல்முதலாக விண்வெளியில் சினிமா ஷூட்டிங் ஷெட் அமைத்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஷ்யா பெறும். இந்த திரைப்படத்தின் கதைப்படி, விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

அதற்காக, அவர் பூமிக்கு திரும்பி வந்து சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதற்காக ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் விண்வெளிக்கு சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கும்படி கதையை திரைப்படமாக்க உள்ளனர். விண்வெளி பயணிகள் மூன்று பேரும், கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்.எஸ் -19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்கின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட 12 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு வரும் 16ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள். இதன் நேரடி ஒளிபரப்பானது நாசாவின் தொலைக்காட்சி சேனல் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ரஷ்யாவின் புதிய முயற்சியை ஹாலிவுட் உள்ளிட்ட சர்வதேச சினிமா துறையினரும் ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4