சிமெந்து, பால்மா மற்றும் எரிவாயு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ள ஜனாதிபதி!

#Sri Lanka President
Yuga
4 years ago
சிமெந்து, பால்மா மற்றும் எரிவாயு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (07) மாலை 5 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (05) இரவு குறித்த கூட்டம் தொடர்பில் அமைச்சரவை செயலாளரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட கூட்டத்தின் போது சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை  ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4