கொரோனா கோர தாண்டவம்! - கல்லூரி வளாகத்தை மூடச்சொல்லி கோரும் 900 மாணவர்கள்!

#world_news #France
கொரோனா கோர தாண்டவம்! - கல்லூரி வளாகத்தை மூடச்சொல்லி கோரும் 900 மாணவர்கள்!

கொரோனா தொற்று அதிகரிப்பால் கல்லூரியை மூடச்சொல்லி அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Limoux (Aude) நகரில் உள்ள collègeல் Joseph-Delteil கல்லூரி மாணவர்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மைய நாட்களில் இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மிக வேகமாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தும் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்தும் கல்லூரியை இயக்கி வருகின்றது.

இந்நிலையில், கல்லூரியில் பயிலும் 900 மாணவர்களும் இணைந்து, கல்லூரியை குறைந்தது ஒருவார காலத்துக்கு மூடும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இணையவழி கல்வியை தொடர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

*அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், அங்கு கடந்தவாரத்தில் 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4