இலங்கை முழுவதும் மீண்டும் மின்தடை ஏற்படும் ஆபத்து?

#SriLanka #Electricity Bill
Yuga
4 years ago
இலங்கை முழுவதும் மீண்டும் மின்தடை ஏற்படும் ஆபத்து?

நாடளாவிய ரீதியாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரசபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களானால், மீண்டும் நாடு முழுவதும் மின்தடை ஏற்படும் ஆபத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4