கனடாவில் எரிபொருள் விலை கிடுகிடுவென ஏறியுள்ளது!

#world_news #Canada
கனடாவில் எரிபொருள் விலை கிடுகிடுவென ஏறியுள்ளது!

கனடாவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேசப் பொருளாதாரம் கொரோனா தொற்றுநோய் மந்தநிலையிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலேயே கனடாவில் எரிபொருள் விலை 7 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

வின்னிபெக் பகுதியில் எரிபொருள் விலை சராசரியாக லிற்றருக்கு 1.335 டொலர் என இருந்த நிலையில், ஒரே நாள் இரவில் தற்போது 1.429 டொலர் என அதிகரித்துள்ளது. இது 13 ஆண்டுகளில் முதல் முறை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி ரொறன்ரோவில் எரிபொருள் விலை லிற்றருக்கு 1.44 டொலர் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விலை உயர்வால் தத்தளித்துவரும் ரொறன்ரோ மக்களுக்கு இந்த எரிபொருள் விலை உயர்வு மேலும் சுமையாக அமையும் என்றே கூறப்படுகிரறது.

கொரோனா ஊரடங்கு, சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மக்கள் சாலைகளில் இறங்க முடிவெடுத்திருக்கும் நிலையில் இந்த எரிபொருள் விலை உயர்வு இடியாக இறங்கியுள்ளது.

ஐடா சூறாவளி காரணமாக அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியானது ஆகஸ்டு மாத இறுதியில் இருந்தே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக கனடாவிலும் இயற்கை எரிவாயு விலையில் கண்டிப்பாக உயர்வு இருக்கும் என்றே தெரிய வந்துள்ளது.

2021ல் கச்சா எண்ணெய் விலை என்பது கிட்டத்தட்ட 63 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இயற்கை எரிவாயு விலையும் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4