இலங்கையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை பலியெடுத்த கொரோனா!

#SriLanka #Covid 19 #Death
Yuga
2 years ago
இலங்கையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை பலியெடுத்த கொரோனா!

1990 சுவ செரிய இலவச அம்பியூலன்ஸ் சேவையில் இணைந்த 29 வயதான சாரதி ஒருவர் கோவிட் -19 காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸால் இறந்த சமீபத்திய சுகாதாரப் பணியாளராக இவர் உள்ளார்.

உயிரிழந்தவர், மீதெனியவில் வசிக்கும் தரிந்து சந்தருவன் குமாரநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இறக்கும் போது அம்பியூலன்ஸ் சேவையின் ஹோமாகம பிரிவில் பணிபுரிந்தார்.

திடீர் இதய நோய் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட பின்னர், அவர் வெள்ளிக்கிழமை (01 அக்டோபர்) எம்பிலிப்பிட்டிய மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது மீண்டும் எம்பிலிப்பிட்டி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவர் ஞாயிற்றுக்கிழமை (03 அக்டோபர்) எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!