இலங்கையில் டெல்ட்டா பரவல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka #Covid 19
Yuga
2 years ago
இலங்கையில்   டெல்ட்டா பரவல் தொடர்பில்  வெளியான அதிர்ச்சி தகவல்!

இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னா் பாதுகாப்பு தன்மை குறைவடைந்து நோய் பரவலடையும் தன்மை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூறு பிரிவின் பணிப்பாளர் வைத்தியா் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளாா்.

முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் டெல்ட்டா தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில், அல்பா தொற்றினால் ஏற்படும் பாதிப்பை விட இரண்டு மடங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்துள்ளதாவது,

இரண்டு முறை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஒருவருக்கு டெலட்டா தொற்று ஏற்படுமாயின் அவரிடமிருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பரவலடையும் தன்மை குறைவடையும். ஆனால், இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 3 மாதங்களின் பின்னா் பாதுகாப்பு தன்மையானது குறைவடைதாகவும்  டெல்ட்டா தொற்று பரவலடையும் தன்மை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!