அமைச்சரால் அச்சுறுத்தப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவு

#Court Order #Anuradapura #Prison
Prathees
2 years ago
அமைச்சரால் அச்சுறுத்தப்பட்ட கைதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த   மாதம்   12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ்  அரசியல் கைதி உட்பட 8 மனுதாரர்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்குமாறு  உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

சிறைச்சாலை  ஆணையாhளர் மற்றும் அநுராதபுர சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டது.

12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு அமைச்சர்  லொஹான் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வந்து தான்   உள்ளிட்ட  கைதிகளை  சிறைக்  கூண்டுக்கு   வெளியே  அழைத்து  முழங்காலில்   உட்கார  வைவத்ததாகவும் தனது  தலையில் துப்பாக்கியை வைத்து  அமைச்சர்  கொலை மிரட்டல் விடுத்ததாக அடிப்படை உரிமை மனுவில் பூபாலசிங்கம் சூரியபாலன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இராஜாங்க  அமைச்சரின் நடவடிக்கைகளால் தமிழ்   அரசியல்  கைதிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அவர்களை உடனடியாக யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

மனுதாரர்கள்   சார்பாக  ஆஜரான  சட்டத்தரணி  எம்.ஏ.சுமந்திரன்,  அமைச்சரின் தவறான நடத்தை மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். உடனடியாக அவர்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  நீதிமன்ற்த்தில் கோரிக்கை விடுத்தார்.

அனைத்து தரப்பினரும் 14 ஆம் திகதி மனு மீது எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிபதிகள் குழு உத்தரவிடப்பட்டதுடன்  21 ம் திகதி மீண்டும் மனுவை பரிசீலிக்க  உத்தரவிட்டது.


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!