கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பாரத் பையோடெக் நிறுவனம்

Keerthi
4 years ago
கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்த பாரத் பையோடெக் நிறுவனம்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி பாரத் பையோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை.

இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் அவசரகால தேவைக்கு மட்டும் கோவேக்சினை பயன்படுத்த அனுமதி வேண்டி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. மேலும் கோவாக்சின் தடுப்பூசியின் சோதனை முடிவுகள் அடங்கிய கோப்புகளை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்பித்துள்ளது. தற்போது இது குறித்த ஆய்வுகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும். குறிப்பாக கோவேக்சின் தடுப்பூசி தரமானதா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும்" என்று தகவல் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4