மணப்பெண் தோழியாக பணியாற்றி ரூ1.5 லட்சம் சம்பளம் வாங்கும் அமெரிக்க பெண்
#United_States
Prasu
4 years ago
அமெரிக்க பெண் ஒருவர் மணப்பெண் தோழியாக பணியாற்ற லட்சகணக்கில் சம்பளம் வாங்குவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் க்ளாண்ட்ஸ் என்ற பெண் தொழில்முறை மணப்பெண் தோழியாக பல்வேறு மணப்பெண்களுக்காக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஏழு வருடங்களாக மணப்பெண் தோழியாக பணியாற்றி வரும் இவர் ஒரு ஆண்டிற்கு 20 முதல் 35 திருமணங்களில் மணப்பெண் தோழியாக வலம்வருவதாக கூறியுள்ளார். திருமணம் ஒன்றுக்கு 1.5 லட்சம் வாங்கிவருவதாக அவரது டிக்-டாக் பதிவில் கூறுகிறார்.
கட்டண மணப்பெண் தோழி என்பது ஒருநாள் எதேச்சையான விபத்தாக நிகழ்ந்தாலும், பின்னாட்களில் இதுவொரு தொழிலாகவே மாறிப்போனதாக பெருமிதம் தெரிவிக்கிறார். இவர் Always A BridesMaid என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.