கைதாகியிருக்கும் ஷாரூக் கான் மகனின் கோரிக்கை!

Prasu
4 years ago
கைதாகியிருக்கும் ஷாரூக் கான் மகனின் கோரிக்கை!

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவலில் உள்ள அவர் போலீசாரிடம் படிக்க அறிவியல் புத்தகம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அவர்கள் அதனை வழங்கியுள்ளார்கள். மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த ஞாயிறன்று (அக்., 03) பணக்கார இளைஞர்கள் பங்கேற்ற மது விருந்து நடைப்பெற்றது. அதிகாலையில் அந்த கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சிலரிடமிருந்து வெளிநாட்டுப் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் அடக்கம். தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி என்.சி.பி.,யின் காவலில் உள்ளார். நாளை அவரது காவல் முடிந்து, ஜாமின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4