நவராத்திரி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை

Prabha Praneetha
3 years ago
நவராத்திரி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

தேவை: பச்சரிசி - 200 கிராம், பொடித்த வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பால் - 200 மில்லி.

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

வாணலியில் அரைத்த மாவைச் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

தண்ணீரைச் கொதிக்கவைத்து உருண்டைகளைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி, வேகவைத்த உருண்டைகளுடன் சேர்க்கவும்.

இதில் ஏலக்காய்த்தூள், பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!