உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்

Prabha Praneetha
3 years ago
உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட்

தேவையான பொருட்கள்

முட்டை - 5

உருளைக்கிழங்கு - 2

மிளகாய் - 5

பெ.வெங்காயம் - 1

வெண்ணெய் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை

முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

அதன்பின்னர் நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து அது சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.

நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!