கேரள ஸ்டைலில் கேரட் பாயாசம்
Prabha Praneetha
3 years ago

தேவையான பொருட்கள் :
துருவிய கேரட் - 1 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 5-6
உலர் திராட்சை - 5-6
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
ஏலக்காய் - 4 (நன்கு தட்டியது)
செய்முறை:
- முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
- பின்னர் அதில் துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
- நன்கு வதக்கிய பின்பு பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.பால் நன்கு கொதித்த பின்பு தீயை குறைவாக வைத்து 15 நிமிடங்கள் கேரட்டை வேக வைக்க வேண்டும்.
- வெந்த பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து 5 நிமிடம் கிளறி, பின் தட்டிய ஏலாக்காயை சேர்த்தால் சுவையான கேரட் பாயாசம் ரெடி.



