பிக்கு ஒருவர் ரூ .30 மில்லியன் பணம் கொடுத்தார்: நான் வாங்கவில்லை: சந்திரிகா வெளிப்படுத்திய தகவல் 

#Chandrika Kumaratunga
Prathees
2 years ago
பிக்கு ஒருவர் ரூ .30 மில்லியன் பணம் கொடுத்தார்: நான் வாங்கவில்லை: சந்திரிகா வெளிப்படுத்திய தகவல் 

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அங்கு வாழும் பிக்கு ஒருவர் தனக்கு ரூ .30 மில்லியன் கொடுத்ததாகவும் அதனை  அவர் பணிவுடன் மறுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று தனது கணவரான விஜய குமாரதுங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, 

ஜனாதிபதியாக ஜப்பானுக்கு நான் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது என்னை சந்திக்க வந்த மகாயான துறவி ஒருவர், சந்திப்பின் முடிவில் அவர் இலங்கை நாணயத்தில் ரூ .30 மில்லியன் தருவதாக கூறி ஒரு பார்சலை என்னிடம் கொடுத்தார்.அந்த பரிசை நான் பணிவுடன் மறுத்தேன்.

பின்னர் அவர் மகிழ்ச்சியற்றவராக ஆனார். நிலைமையை புரிந்து கொண்ட துணை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே இந்த பணத்தை பயன்படுத்தி விஜய குமாரதுங்கவின் கிராமத்தில் அவர் பெயரில் ஒரு மருத்துவமனையை உருவாக்க  முன்மொழிந்தார்.அது சீதுவாவில் உள்ள விஜய குமாரதுங்க மருத்துவமனையின் கடந்தகால கதை.

இன்றும் கூட நான் அந்த மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக எனது கணிசமான நேரத்தை ஒதுக்குகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!