சமையல் எரிவாயு விலை குறித்த இறுதி முடிவு இன்று

#Laugfs gas
Prathees
2 years ago
சமையல் எரிவாயு விலை குறித்த இறுதி முடிவு இன்று

எரிவாயு விலை உயர்வு குறித்து இன்று (10) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை லாஃப்ஸ் நிறுவனமும் இன்று விலைகளை  உயர்த்துவது  குறித்து  இன்று முடிவை எடுக்க உள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகாபிட்டிய தெரிவித்தார்.

அதன்படிஇ நாளை (11) முதல் புதிய விலைகளின் கீழ் எரிவாயுவை விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு நிறுவனங்களின் வேண்டுகோளின்படி எரிவாயுவை ரூ .550 அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்த போதிலும்இ அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை.

நிறுவனங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, பால் பவுடர், எரிவாயு, கோதுமை மாவு மற்றும் சீமெந்து மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் முடிவு செய்தது.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் நிறுவனங்கள் நேற்று (09) முதல் அதன் பொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ஒரு கிலோ பாக்கெட் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரின் விலை ரூ .250 ஆகவும் 400 கிராம் பாக்கெட் ரூ .100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி ஒரு கிலோகிராம் பாக்கெட் பால் பவுடரின் புதிய விலை 1195 ரூபாய் மற்றும் 400 கிராம் பால் பாக்கெட் புதிய விலை 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!