இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல்..!! நாளை முதல் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை!

#SriLanka
Yuga
2 years ago
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல்..!! நாளை முதல் அதிகரிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை!

எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமைமா என்பவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது நிறுவனங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள், விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யோசனை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கோரியுள்ளார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எரிவாயுவிற்கான உரிய விலை இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!