வெயிலுக்கு இதமான குளிர்ச்சி தரும் சாக்லேட் குல்பி

குல்பி தயாரிக்க தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
பால் பவுடர் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
பிரஷ் கிரீம் - 2 கப்
கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 6 டீஸ்பூன்
செய்முறை:
1. ஒரு கடாயில், பால், பிரஷ் கிரீம் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவை ஒரு கொதி நிலைக்கு வரும் வரை சூடேற்றவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.
2. இப்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மற்றொரு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
3. இப்போது பால் கிரீமியாக மாறியதும், சோகோ சிப்ஸ் மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.
4. சாக்லேட் கரையும்வரை நன்கு கலக்கவும். இறுதியாக அடுப்பை அனைத்துவிட்டு கலவையை சிறிது குளிர்விக்க வேண்டும்.
5. பின்னர் குல்பி அச்சுகளில் கலவையை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சுமார் 6 முதல் 8 மணி நேரம் குளிர்விக்க வேண்டும்.
6. அச்சுகளில் கலவை சரியாக உறைந்ததும் அவற்றில் இருந்து குல்பியை வெளியே எடுத்து பரிமாறலாம்.
இது தவிர மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய மலாய் குல்பியை கூட நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.



