இலங்கையில் ஹோட்டல் உணவு உண்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

#SriLanka
Yuga
2 years ago
இலங்கையில்  ஹோட்டல்  உணவு உண்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

இலங்கையில் ஹோட்டல் உணவு வகைகளின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உணவுப் பொதி (lunch packet), ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து (kottu), பால் தேனீர் உள்ளிட்டனவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு நிகராக உணவுப் பொதிகளின் விலையை உயர்த்தினால் ஒரு பொதிக்கான விலையை 30 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பொருட்களின் விலை

உயர்வினால் இவ்வாறு ஹோட்டல் உற்பத்தி உணவுகளின் விலை உயர்த்தப்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த அரசாங்கத்தை விடவும் ஹோட்டல் உரிமையாளர்கள் மனிதாபிமானம் மிக்கவர்க்கள் என தெரிவித்துள்ளது.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!