கனேடிய மாகாணம் ஒன்றில் செவிலியர்களுக்கு பேரிடியாகும் புதிய ஆணை: வெளிவரும் பின்னணி

#world_news #Canada
கனேடிய மாகாணம் ஒன்றில் செவிலியர்களுக்கு பேரிடியாகும் புதிய ஆணை: வெளிவரும் பின்னணி

கியூபெக் மாகாணத்தில் செவிலியர்கள் ஏற்கனவே ஊதியம் இல்லாமல் இடைநீக்கத்தை எதிர்கொள்ளும் நிலையில் பேரிடியாக இன்னொரு ஆணை வெளியாகியுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத செவிலியர்கள் தற்போது ஊதியமற்ற இடைநீக்கத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களின் வேலைக்கான உரிமம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கடைசி திகதி அக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேரிடியாக இந்த ஆணை வெளியாகியுள்ளது.

சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் தவிர்ப்பதன் காரணத்தை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் Luc Mathieu. ஒரு செவிலியராக பணியாற்றி வந்திருந்தால், இதுபோன்ற ஒரு சூழலில், நமது பராமரிப்பில் இருக்கும் நோயாளிகள் தொடர்பில் கண்டிப்பாக கவலை கொண்டிருப்பேன் என Luc Mathieu தெரிவித்துள்ளார்.

தங்களின் உறுப்பினர்களில் 4,000 பேர்கள் இன்னும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும் 5,716 பேர்களின் நிலை தொடர்பில் உறுதி செய்ய வேண்டும் எனவும் Luc Mathieu குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் செவிலியர்களின் வேலைக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சுகாதார அமைச்சர் Christian Dube கடந்த வாரம் முன்வைத்திருந்தார்.

தற்போது செவிலியர்கள் தொடர்பில் வெளியாகியிருக்கும் இந்த ஆணையை சுகாதார அமைச்சர் வரவேற்றுள்ளார். கியூபெக்கில் மருத்துவர்களுக்கும் இதுபோன்ற உரிமம் ரத்து செய்யப்படும் என்ற ஆணை வெளியிடப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறையை பொறுத்தமட்டில் 25,000 ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4