பசியைத் தாங்க முடியவில்லை: தந்தையொருவர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்

#Food
Prathees
4 years ago
பசியைத் தாங்க முடியவில்லை: தந்தையொருவர் மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம்

பசியைத் தாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளின் தந்தை தென்னை மரத்தில் ஏறி போராட்டம் செய்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் வஸ்கடுவ பிரதேசத்தில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரூ. 5000 உணவுப் பொருட்களும் கிடைக்கவில்லை.  வாழ்வாதாரத்திற்கு இல்லை என்று கூறி குறித்த நபர் மரத்தில் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் குறித்த நபரை மரத்திலிருந்து இறங்குமாறு கோரியதையடுத்து குறித்த நபர் இறங்கி உள்ளார்.

அதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த நபருக்கு உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

எனக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 5000 ருபாய் நிவாரணமும் கொடுக்கவில்லை எந்த உதவியும் கிடைக்கவில்லை என குறித்த நபர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4