பிரான்ஸில் சுகாதாரப் பாஸ் அடுத்த வருடம்  ஜூலை வரை நீடிக்கப்படலாம்! 

#world_news #France
பிரான்ஸில் சுகாதாரப் பாஸ் அடுத்த வருடம்  ஜூலை வரை நீடிக்கப்படலாம்! 

அவசியம் ஏற்பட்டால் கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீடிக்கப்படலாம் என்று அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடி வில் தெரிவித்திருக்கிறார்.

சுகாதாரப் பாஸ் விதிகள் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. உரிய காலப் பகுதிக்கு மேலதிகமாக அதனை நீடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
சுகாதாரப் பாஸ் நடைமுறைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசு முன்னர் அறிவித்த கால வரம்பு நவம்பர் 15 ஆம் திகதி ஆகும்.

எனினும் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை மிக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் அரசு, சுகாதாரப் பாஸை தேவைப்பட்டால் வரும் ஜூலை மாதம் வரை நீடிப்பதற்கு உத்தேசித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் பரவல் வெகுவாகக் குறைந்து வருகின்ற போதிலும் தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்
திய பேச்சாளர், இது ஒரு தொற்று நோய் என்பதால் அது எப்போதும் மீளக் கிளம்பலாம்-என்பதைச் சுட்டிக்காட்டினார். எனவே மக்கள் கூடுகின்ற இடங்களில் கண்காணிப்பைத் தொடர்ந்து வைத்தி
ருக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை -சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலில் விழிப்புடன் இருப்பதைக் கைவிடவேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"நாங்கள் இன்னமும் தொற்று நோயைத் தோற்கடித்துவிடவில்லை. அதன் முடிவுக் கட்டம் இது என்று நம்புவது தவறானது" -என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த ஓரிரு நாட்களாக தொற்றாளர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு முன்னர் எதிர்கொண்ட தொற்று அலைகளை ஒத்த இன்னொரு அலை உருவாகும் என்று அஞ்சுவதற்கு எந்தக்
காரணமும் இல்லை-என்றும் சுகாதாரஅமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4