கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

#Covid 19
Prasu
4 years ago
கொரோனாவால் உலகளவில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

  • அமெரிக்கா- பாதிப்பு 4,55,46,217  உயிரிழப்பு 7,39,762  குணமடைந்தோர் 3,51,04,880.
  • இந்தியா- பாதிப்பு 3,40,19,680  உயிரிழப்பு 4,51,469  குணமடைந்தோர் 3,33,55,097.
  • பிரேசில்- பாதிப்பு 2,15,97,949  உயிரிழப்பு 6,01,643  குணமடைந்தோர் 2,07,40,267.
  • இங்கிலாந்து- பாதிப்பு 8,72,883  உயிரிழப்பு 1,38,080  குணமடைந்தோர் 67,65,629.
  • ரஷ்யா- பாதிப்பு 78,61,681  உயிரிழப்பு 2,19,329  குணமடைந்தோர் 69,16,086.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4