கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் பச்சடி

தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 21
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1/4 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 1
சமையல் எண்ணெய் - 2 tsp
உப்பு - தே.அ
செய்முறை :
வெண்டைக்காயை வட்டமாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதை கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதோடு கொஞ்சம் உப்பு தூவி பிசு பிசுப்பு போக வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் மீண்டும் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் சுருங்க வேகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்
பின் பச்சை மிளகாயையும் மொறுமொறுப்பு தன்மை வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக தேங்காயுடன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
தயிரை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். பின் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேருங்கள். அதோடு அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்து வதக்குங்கள்.
பின் அதில் வெண்டைக்காயையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். மசாலா அனைத்தும் ஒன்றாகக் கலந்ததும் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.
வெண்டைக்காய் மசாலா ஆறியதும் அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் பச்சடி தயார்.



