சுவிற்சலாந்தில் கொவிட் சான்றிதழ் காரணமாக ஹோட்டல் துறையினர் பாதிப்பு.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் கொவிட் சான்றிதழ் காரணமாக ஹோட்டல் துறையினர் பாதிப்பு.

சுவிற்சலாந்தில் ஒக்டோபர் 14ம்திகதி நடந்து முடிந்த 24 மணிநேரத்தில் 368 பேர் கொவிட் தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 124 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அடங்குவர். அன்று இருவர் கொவிட் தொற்றினால் இறந்துள்ளனர்.

சுவிற்சலாந்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் உணவகங்கள் செப்டம்டர் நடுப்பகுதியில் கணக்கெடுப்பின் படி கொவிட் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சராசரியாக 27.6வீத வருமான வீழ்ச்சியை கண்டதாக அறியவருகிறது.

விருந்தினர்களுக்கு கட்டாய சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 81.3வீத கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்கள் வர்த்தக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்பு காஸ்ட்ரோசுயிஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிராமப்புற உணவகங்கள் 31.5% வருமான வீழ்ச்சியுடன் மிகவும் பாதிக்கப்படுவதாக அறிவித்தன. ஒட்டுமொத்தமாக, 3.4% பதிலளித்தவர்கள் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பயனடைவதாக தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4