யாழ் மறைமாவட்டத்தின் ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!
#SriLanka
#Jaffna
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத் தொடர்ந்தே, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1966ஆம் ஆண்டு பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள், யாழ். தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.
இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி, கலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார்.
அத்துடன், உரோமில் இறையியலில் பட்டத்தையும், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும், பிரித்தானியாவில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட பன்முகக் கல்வியாளராவார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே