பிக்பாஸ் எலிமினேஷன்.. இந்த வாரம் வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார்

Prabha Praneetha
3 years ago
பிக்பாஸ் எலிமினேஷன்.. இந்த வாரம் வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார்

பிக் பாஸ் சீசன்5  போட்டியாளர்களில் சிலர் மட்டுமே மக்களுக்கு பரிச்சயமானவர்கள். பிற போட்டியாளர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியே மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறது.

சீசன்5 தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், தற்போது முதல் எலிமினேஷன் ரவுண்டு  நடைபெற உள்ளது. மேலும் இந்த வார தொடக்கத்தில் இருந்தே, பிக்பாஸ் வீட்டிற்குள் சிறு சிறு கருத்து மோதல்கள் எழுந்து வருகிறது.

அதேசமயம் சென்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அதிக நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லும் குணத்துடனும் காணப்படுகின்றனர். இதனால் பிக்பாஸ் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடுகிறது.

ஏனெனில், இவர்களுக்குள் சண்டை மூட்டி விட சிரமப்பட வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடந்து வரும் இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், டிஆர்பி ரேட்டிங்கில் சிறந்த இடத்தையும் தொடர்ந்து பிடித்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் நமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனால் 17 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது மீதம் உள்ளனர். இதில் தாமரை தற்போது தலைமை பதவி வகித்து வருவதால், இவரை தவிர, மற்றவர்கள் ஒருவரை ஒருவர் எலிமினேஷன் ரவுண்டிற்கு நாமினேட் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் அதிர்ஷ்டவசமாக பவானி ரெட்டியின் பெயரை சக போட்டியாளர்கள் யாரும் எலிமினேஷன் ரவுண்டுக்கு நாமினேட் செய்யவில்லை என்பதால், இவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே  மக்கள் அளித்த வாக்கின் அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்று பிரியங்கா முதலிடத்திலும், ராஜு இரண்டாவது இடத்திலும், இமான் அண்ணாச்சி, அக்ஷரா நிரூப், இசைவாணி, வருண், சிபி, மதுமிதா, ஐக்கி பெர்ரி, அபிநய், சுருதி, நாடியா சாங், சின்ன பொண்ணு, அபிஷேக் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.

எனவே கடைசி இரண்டு இடங்களை சின்னப்பொண்ணு, அபிஷேக்கும் பிடித்ததால் அவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என்று சமூக வலைதளங்களி

ல் செய்திகள் உலாவிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை விஜயதசமியை முன்னிட்டு இந்த எலிமினேஷன் ரவுண்டே கேன்சல் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!