முச்சக்கர வண்டிகளைத் திருடி விற்ற கும்பல் கைது: 10 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன

#Arrest
Prathees
4 years ago
முச்சக்கர வண்டிகளைத் திருடி விற்ற கும்பல் கைது: 10 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன

ஜா-எல பகுதியில் நீண்டகாலமாக முச்சக்கரவண்டிகளைத் திருடி  விற்பனையில்  ஈடுபட்டுள்ள  கும்பலை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக ஜா-எல பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களிடமிருந்த 20 முச்சக்கரவண்டிகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜா-எலஇ ராகமஇ போப்பிட்டிய மற்றும் கல்பிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரதான சந்தேகநபருக்கு சொந்தமான ராகம கார் பார்க்கிங்கில் 11 முச்சக்கர வண்டிகளை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

ராகமஇ பமுனுகம மற்றும் கல்பிட்டிய பகுதிகளில் 5 முச்சக்கர வண்டிகள் பல்வேறு நபர்களுக்கு விற்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன், மேலம் 4 முச்சக்கர வண்டிகள் கல்பிட்டிய மற்றும் ராகம ஆகிய இடங்களில் உள்ள இரண்டு கராஜ்களில்  விற்பனைக்கு தயாரான நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டள்ளன.

சந்தேகநபர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளின் விற்பனையின் போது இயந்திர எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலியாக அனுமதிப் புத்தகங்களும் உரிமங்களும் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக  ஜா-எல பொலிசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4