விசாரணைக்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து

#Police #Hospital
Prathees
4 years ago
விசாரணைக்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து

இரண்டு பொலிஸ்  உத்தியோகத்தர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் மொதாரா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் விசாரணை நடத்தச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே கத்திக்குத்துக்கு இலக்காகி  காயமடைந்தனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4