ஸ்பைசி மட்டன் தொக்கு

Prabha Praneetha
3 years ago
ஸ்பைசி மட்டன் தொக்கு

தேவையானவை:

மட்டன் - 1/2 கிலோ

தனியாத் தூள் - 1 ஸ்பூன்

சீரகத் தூள் - 1 ஸ்பூன்

பட்டை - 1

கிராம்பு - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

இஞ்சி- பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்துவிட்டு மட்டனுடன் தயிர், உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி குக்கரில் போட்டு தண்ணீர் வற்றும் அளவு வேகவிடவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் மட்டன் தொக்கு ரெடி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!