புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிடவிருக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

#world_news #Canada
புதிய அமைச்சர்கள் பட்டியலை வெளியிடவிருக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியல் வெளியாக உள்ளது. எதிர்வரும் 26ம் திகதி புதிய அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட உள்ளார்.

மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவிருக்கும் பிரதமர் ட்ரூடோ, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும், பெருந்தொற்றால் தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் தமது கவனத்தை செலுத்துவார் என்றே கூறப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி பாராளுமன்றம் கூட உள்ளது. அதற்கு முன்னரே அமைச்சர்களின் பட்டியலை ட்ரூடோ வெளியிட உள்ளார். இதனிடையே, பிரதமர் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிக்கையில்,

அடுத்த வார தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொலைபேசியில் பேச பிரதமர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் கனேடிய மக்களின் முன்னுரிமைகள் தொடர்பிலும், முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை ட்ரூடோ முன்வைப்பார் என்றே தெரிய வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4