நாட்டில் மேலும் 488 பேருக்கு கோவிட் தொற்று

#Corona Virus #Covid 19
Prathees
4 years ago
நாட்டில் மேலும் 488 பேருக்கு கோவிட் தொற்று

நாட்டில் மேலும் 488 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 530,909 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கோவிட் தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் இதுவரை  பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4