இன்று 600 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவு!

#Covid 19
Prasu
2 years ago
இன்று 600 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவு!

நாட்டில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 649 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 531,070 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,472 ஆக அதிகரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!