ஒரே வீட்டில் 100 விஷ பாம்புகள். அதிர்ச்சியில் பாம்பு பிடி வீரர்

Prasu
4 years ago
ஒரே வீட்டில் 100 விஷ பாம்புகள். அதிர்ச்சியில் பாம்பு பிடி வீரர்

அமெரிக்காவில் 100 விஷப்பாம்புகள் வீடு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் Northern California- வில் வீடு ஒன்றிலிருந்து 100 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாம்பு பிடிப்பதில் வல்லவரான அல் உல்புக்கு தனது வீட்டில் Rattle பாம்புகள் இருப்பதாக அந்த வீட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அல் உல்பு 100-க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்தின் அடிப்பகுதியில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் 59-க்கும் மேற்பட்ட குட்டி பாம்புகளும், 22 பெரிய பாம்புகளும் அந்த வீட்டில் இருந்துள்ளது.

இதையடுத்து அந்த பாம்புகள் அனைத்தும் லாவகமாக அதற்கான கருவிகள் பயன்படுத்தப்பட்டு பிடிபட்டுள்ளது. இதற்கிடையே "நான் 32 வருடங்களாக பாம்பு பிடி பணியை செய்து வருகிறேன். ஒரு வீட்டில் அதிகபட்சமாக ஐந்து பாம்புகளை மட்டுமே நான் பிடித்துள்ளேன். ஆனால் இந்த வீட்டில் இவ்வளவு பாம்புகள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

இந்த பாம்புகள் அனைத்தும் அஸ்திவாரம் தோண்டும் போது வீட்டின் அடிப்பகுதியில் தங்களுக்கான சொந்த வீட்டை எளிதாக கட்டியிருக்கலாம்" என்று அல் உல்பு கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4