புற்றுநோய் மருந்து கொரோனாவை அழிக்குமா..? உயிரிழப்பில் முடிந்த ஆய்வு

Keerthi
4 years ago
புற்றுநோய் மருந்து கொரோனாவை அழிக்குமா..? உயிரிழப்பில் முடிந்த ஆய்வு

பிரேசிலில் புதிதாக கொரோனா வைரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று உயிரிழப்பில் முடிந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை மருந்து ஒன்றைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட 200 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த 200 பேரும் கல்லீரல் அல்லது சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுநல வழக்கு ஒன்று உயிரிழந்த 200 பேர்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவை கட்டுபடுத்த புற்றுநோய் மருந்தால் முடியுமா என்ற சோதனையே மனித உரிமை மீறல் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ஹார்மோன் விளைவுகளை தடுக்கவும், புரோஸ்டேட் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தான் Proxalutamide மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த மருந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துமா என்பது குறித்த சோதனையால் உயிரிழப்புகளே அதிகளவில் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த மருந்தை உட்கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததோடு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே 645 பேர் இந்த மருந்தை உட்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அந்த மருந்தை உட்கொண்ட அனைவரும் மருத்துவரை முழுமையாக நம்பியதாக தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4