24 மணிநேரத்தில் 52 பேர் சிக்கினர்!

Reha
4 years ago
24 மணிநேரத்தில் 52 பேர் சிக்கினர்!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 981ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 362 வாகனங்களில் வந்த 783 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4