குடைமிளகாய் புதினா புலாவ்

தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
பட்டை - 1 துண்டு
சீரகம் - 1/4 tsp
எண்ணெய் - 3 tsp
நெய் - 2 tsp
உப்பு - தே.அ
பாஸ்மதி அரிசி - 1 கப்
செய்முறை :
சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்து வடித்து ஆற வைத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பட்டை , சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். அதை பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்குங்கள்.
பின் குடைமிளகாய் , உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வடித்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். அவ்வளவுதான் சுவையான குடைமிளகாய் புதினா சாதம் தயார்.



