பில் கிளிண்டனுக்கு சிறுநீர் பாதை தொற்று

Prasu
4 years ago
பில் கிளிண்டனுக்கு சிறுநீர் பாதை தொற்று

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் சிறிய நோய் தொற்று காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தற்போது அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேலும் ஒரு இரவு அவர் மருத்துவமனையில் தங்க வலியுறுத்தியுள்ளனர். 75 வயதாகிய பில் கிளின்டன், 1993-ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும், ரத்தம் தொடர்புடைய சிறிய ஒவ்வாமை காரணமாக அவருக்கு லாஸ்ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பில் கிளின்டன் செய்தி தொடர்பாளர் ஏஞ்சல் ஹோரே தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மருத்துவமனையில் மேலும் ஓர்நாள் சிகிச்சை பெறும் பில் கிளிண்டனுக்கு ஐவி நோய் எதிர்ப்புசக்தி மருந்துகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பில் கிளிண்டனுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் செப்ஸிஸ் என்கிற நோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 17 லட்சம் மக்களை செப்ஸிஸ் நோய் தாக்குகிறது. இதன்காரணமாக ஆண்டுதோறும் 2 லட்சத்து, 70 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிர் இழக்கின்றனர்.கடந்த 2004-ஆம் ஆண்டு பில் கிளிண்டனுக்கு சிறிய அளவில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து அவரது இதய ரத்த நாளத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டிருக்கும் பில் கிளின்டன் பூரண குணமடைந்து வீடு திரும்ப அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4