கடத்தப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் மீட்பு

Prasu
4 years ago
கடத்தப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் மீட்பு

கடத்தல்காரர்களிடம் இருந்து 42 அரியவகை கடல் ஆமைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சமீபகாலமாக அரியவகை உயிரினங்களை கடத்தி விற்பனை செய்யும் குற்றமானது அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவில் உள்ள La Guajira என்ற பகுதியில் அரியவகை உயிரினங்களை கடத்தும் கும்பலிடம் இருந்து 42 கடல் ஆமைகள் மீட்கப்பட்டுள்ளது.

அதில் 31 ஆமைகள் உயிருடன் பாதுகாப்பாக இருந்துள்ளது. மேலும் மீதமுள்ள 11 ஆமைகளை கடத்தல்காரர்கள் சரியாக கையாளாததால் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உலக வனவிலங்கு நிதியம் கூறியதாவது "கடல் ஆமை இனத்தைச் சேர்ந்த எல்லா வகையும் கிட்டத்தட்ட அழியும் நிலையில் உள்ளது. அதனால் இவைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4