பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - இரு கைகளும் துண்டிக்கப்பட்ட இளைஞன்

Reha
4 years ago
பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - இரு கைகளும் துண்டிக்கப்பட்ட இளைஞன்

பண்டாரகம - வல்கம வீட்டுத் தொகுதியை அண்மித்த பகுதியில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு நபர்கள் மீது கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஒருவரின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மற்றையவரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபரே சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் வல்கம மயானத்தின் முன்பாக வீழ்ந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4