யாழில் இரண்டு மாத சிசு திடீரென உயிரிழப்பு!

Reha
4 years ago
யாழில் இரண்டு மாத சிசு திடீரென உயிரிழப்பு!

பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. வட்டுகோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த சிசு இன்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது.

சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி சிசு உயிரிழந்தது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4