பிரான்ஸில் கொரோனா வைரஸ் : நேற்றைய நிலவரம்!

#world_news #France
பிரான்ஸில் கொரோனா வைரஸ் : நேற்றைய நிலவரம்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்களை Santé publique France வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3.778 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 7,089,552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தற்போது 6,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 1.052 பேர் சிகிச்சை பெற்று வருகின்றர். இரு பிரிவிலும் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமையோடு ஒப்பிடுகையில் ஓரளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சாவு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117 265 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் மருத்துவமனையில் 90 401 பேர் சாவடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4