கசப்பு இல்லாத வாழைப்பூ வடை

தென்னிந்திய உணவுகளில் வடைக்கு எப்போதுமே இடம் உண்டு. விசேஷ நாட்கள் என்றாலே கண்டிப்பாக உளுந்து வடை அல்லது மசால் வடை இலையில் இருக்கும்.
சாமிக்கு படியல் போடும் போதும் கண்டிப்பாக வடை இருக்கும். அதுவே ஸ்நாக்ஸ் என்றால் முதலில் தோன்றுவது வாழைப்பூ வடை தான்.
பெரும்பாலான பிள்ளைகள் வாழைப்பூ வடை என்றாலே நோ சொல்லி விடுவார்கள். கேட்டால் கசக்கும் என்பார்கள்.
ஆனால் உண்மையில் வாழைப்பூவில் துவர்ப்பு சுவை தான் அதிகம் இருக்கும். கசப்பு என்பது நாம் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறால் மட்டுமே ஏற்படும்.
இனி அந்த பிரச்சனையே வேண்டாம். கசப்பு இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வாழைப்பூ வடை செய்ய கத்துக்கலாமா?
முதலில் அதற்கு தேவையான பொருட்கள் : வாழைப்பூ நறுக்கியது, கடலை பருப்பு, இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம்
கொத்தல்லி ,உப்பு, எண்ணெய். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. நறுக்கிய வாழைப்பூவை சரியாக 30 நிமிடம் மோரில் ஊற வைக்க வேண்டும்.
அப்படி ஊற வைத்தால் வடையில் கசப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மொரு மொரு என்ற சூப்பரான வடை கிடைக்கும்.
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் 2 மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் நறுக்கிய ஊற வைத்துள்ள வாழைப்பூவை வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பூ இயல்பாகவே தண்ணீர் விடும், மேலும் அது மோரில் ஊற வைக்கப்பட்டதால் தண்ணீர் சேர்க்காலம் வடை பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம், கொத்தல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய்யை சூடுப்படுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மாவை வடை போல் வட்டமாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ வடை ரெடி.முக்கியமாக பொரிக்கும் போது பொன்னிறமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இந்த பக்குவத்தில் செய்தால் கண்டிப்பாக கசப்பு இல்லாத கிடைக்கும்.



