ஆசிரியர் – அதிபர்கள் பாடசாலை திரும்பும் திகதி அறிவிப்பு

Reha
4 years ago
ஆசிரியர் – அதிபர்கள் பாடசாலை திரும்பும் திகதி அறிவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அன்றைய தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த கூட்டணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், மேற்கண்ட விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதேவேளை, பாடசாலை ஆரம்ப தினத்திலேயே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

வருகின்ற 25ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4