தகவல் தெரிவித்தால் 10,000 டொலர் சன்மானம்: கனேடிய இளைஞர் ஒருவரின் குடும்பத்தினர் அறிவிப்பு

#world_news #Canada
தகவல் தெரிவித்தால் 10,000 டொலர் சன்மானம்: கனேடிய இளைஞர் ஒருவரின் குடும்பத்தினர் அறிவிப்பு

கனடா, ஒட்டாவா பகுதியை சேர்ந்த நபர் வியாழக்கிழமையில் இருந்தே மாயமான நிலையில், அவர் தொடர்பில் தகவல் தெரிவிப்போருக்கு குடும்பத்தினர் சன்மானம் அறிவித்துள்ளனர்.

அக்டோபர் 14ம் திகதி அவ்ரோ சர்க்கில் பகுதியில் கடைசியாக காணப்பட்டுள்ளார் 35 வயதான Brett O'Grady. அதன் பின்னர் அவர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னார்வலர்கள் பலரின் உதவியுடன் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், மாயமான Brett O'Grady தொடர்பில் உறுதியான தகவல் தெரிவிக்கும் நபருக்கு 10,000 டொலர் சன்மானம் அளிக்கப்படும் என அவரது தந்தை அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையில் இருந்தே அவர் தொடர்பில் பொலிசாரும் தன்னார்வலர்களும் தீவிரமாக தேடி வருகின்றனர். உள்ளூர் மக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், Brett O'Grady தொடர்பில் தகவல் தெரிய வந்தால் பொலிசாரை நாடவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் மாயமானதன் காரணம் தங்களுக்கு புரியவில்லை எனவும், பத்திரமாக அவர் குடியிருப்புக்கு திரும்ப வேண்டும் என்றே அனைவரும் விரும்புவதாக அவர் தந்தை தெரிவித்துள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4