ஹட்டனில் பதற்றம் ; ஜீவன் தொண்டமானுக்கும் ஹட்டன் நகரசபை தலைவருக்கும் முறுகல்!

Keerthi
4 years ago
ஹட்டனில் பதற்றம் ; ஜீவன் தொண்டமானுக்கும் ஹட்டன் நகரசபை தலைவருக்கும் முறுகல்!

ஹட்டன் நகர சபைக்கு அருகாமையில் உள்ள உடற்பயிற்சிக் கூடாமென்று தமது வரிப்பணத்தை செலுத்தாமையின் காரணமாக குறித்த உடற் பயிற்சி நிலையத்தை மூடுவதற்கு ஹட்டன் நகர சபை தலைவர் பாலசந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு உடற் பயிற்சிக் கூடத்தின் உரிமையாளர் உடனடியாக கொண்டுசென்றுள்ளார். சபை தலைவருடன் வன்முறையில் ஈடுபடும் நோக்கில் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர்கள் நடந்துக்கொள்ள முற்பட்டுள்ளனர். 
குறித்த இடத்திற்கு நேரடியாக சென்ற ஜீவன் தொண்டமான் உடற்பயிற்சிக் கூடாத்தை திறக்குமாறு நகர சபை தலைவரை பணித்துள்ளார். குறித்த வரிப் பணத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஜீவன் தொண்டமான் திடீரென இந்த விடயத்திற்கு சென்று வரி செலுத்தாத உடற் பயிற்சிக் கூடத்தை திறந்தமையால் சற்று பதற்றமான நிலையும் தோன்றியது.  இங்கு பொலிஸார் சென்றுள்ளனர் 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4