லொறியில் மோதி 15 வயது சிறுவன் பலி

#Accident #Police #Vavuniya
Prathees
4 years ago
லொறியில் மோதி 15 வயது சிறுவன் பலி

செட்டிகுளம் மதவாச்சி-மன்னார் பிரதான வீதியில்  முதலியகுளம் பிரதேசத்தில்  இடம்பெற்ற  விபத்தில் 15 வயது சிறுவன்  உயிரிழந்துள்ளார்.

மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து  லொறியின் சக்கரத்தின் கீழ் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன்   படுகாயமடைந்துள்ளான்.

விபத்தில் படுகாயமடைந்த 15 வயது சிறுவன்  வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்த சிறுவன் செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4